Life Events

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

-திருக்குறள்

தேசமே தெய்வம் என்ற பக்தியுடனும் நேர்மை செருக்குடனும் அஞ்சா நெஞ்சுடனும் நம் மனங்களில் வாழும் உயர்திரு கேப்டன் எஸ். பி. குட்டி பி.இ., அவர்களின் வாழ்க்கை குறிப்பு :

உயர்திரு கேப்டன் எஸ். பி. குட்டி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த புல்லு விளை ஊரில் திரு சுப்பையா நாடார், திருமதி பாக்கியலட்சுமி அம்மையார் தம்பதியருக்கு 1940 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் நாள் பிறந்தார்.

★ இவர் 1964ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

★ 1966 இல் இந்தியா பாகிஸ்தான் போர்க்களத்தில் ராணுவ கேப்டனாக பஞ்சாப் எல்லையில் பணியாற்றினார்.

★ 1968இல் தனது சொந்த ஊரில் ஹிந்து மத வாலிபர் சங்கம் என்ற அமைப்பைத் துவங்கி பஜனை, ஸ்ரீமத் பகவத் கீதை வகுப்புகள் நடத்தினார். நூல் நிலையம் அமைத்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் படிக்கும் வழக்கத்தை உருவாக்கினார்.

★ அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வடுகன்பற்று ஊரில் அகஸ்தியர் இந்து சமயப் பேரவை நடத்தி, செயல்திட்டம் வகுத்து, பல ஊர்களுக்கு சென்று இலக்கிய, ஹிந்து மத சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடத்தினார்.

★ இவர் 1993 வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.

★ இவர் நேர்மையாக இருந்த காரணத்தால் அடிக்கடி இடம் மாறுதல் செய்யப்பட்டார். செல்லும் ஊர்களில் எல்லாம் கீதை வகுப்பு சங்க ஷாகா, திருவிளக்கு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்தார்.

★ ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்காக பல ஆண்டுகள் தொண்டாற்றியதுடன் நாகபுரியில் மூன்றாண்டு பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.

★ 1996 ல் தமிழக பாஜக துணை தலைவராக செயலாற்றினார்.

★ 1997 இல் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார்.

★ பின்னர் இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். கிராம கோயில் பூசாரிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்.

★ இவரது எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் தங்களது மதமாற்றப் பணிக்கு இடையூறு என்று கருதிய வேற்று மதத்தவர்கள் இவரை பலமுறை கொல்ல முயற்சித்தனர். ஆனால் இறைவன் அருளால் காப்பாற்றப்பட்டார்.

★ கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் சமய வகுப்பு பாடத்திட்டம் உருவாவதில் முக்கிய பங்காற்றினார்.

★ கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு வந்தபோது அதை எதிர்த்து பல ஆண்டுகள் போராடி அணுமின் நிலையம் அமைவதற்கு துணை நின்றார்.

★ 45 ஆண்டுகளாக எழுத்தாளராக, தேசபக்தியும், தியாக உணர்வும் ஊட்டும் 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதினார்.

★ அறிவுசால் ஆன்மீக கல்விகழகம் என்ற அமைப்பை நிறுவி பல ஆண்டுகளாக கீதை வகுப்புகளை நடத்தி கீதைக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் அளித்ததோடு அந்த சிந்தனையின் படி நூற்றுக்கணக்கான மாணவர்களையும் உருவாக்கினார்.

★ ஸ்ரீமத் பகவத் கீதைக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் அளித்து புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். இது ஐந்து பதிப்புகளை கண்டுள்ளது.

★ திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ஸ்ரீமத் பகவத் கீதையை குறை சொல்லும் வகையில் 'கீதையின் மறுபக்கம் என்ற நூலை வெளியிட்ட போது கீதையின் மறுபக்கத்திற்கு மறுப்பு" என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு ஹிந்து சமயத்திற்கு பெருமை சேர்த்தார்.

★ இந்து குடும்பங்களில் மங்கலப் பிரார்த்தனை, ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் செய்து நமது கலாச்சார சடங்குகளில் அனைவரையும் ஈடுபடுத்தினார்.

★ கடந்த 60 ஆண்டு காலமாக ஆன்மீக,தேசியம் மற்றும் இந்து சமுதாய மறுமலர்ச்சி பணியில் தனதுவாழ்வை அர்ப்பணித்து தமிழகம் முழுவதும் இந்து மறுமலர்ச்சியை உருவாக்கிய இந்துத்துவ வீரர் கேப்டன் எஸ்.பி.குட்டி அவர்கள்...

★ அகில பாரத இந்து மகா சபா-வை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் கேப்டன் எஸ்.பி.குட்டி அவர்கள்...

★ எண்ணற்ற தேச பக்தர்களை உருவாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழு நேர ஸ்வ்வயம் சேவரக பணியாற்றி , சென்ற இடம் எல்லாம் சுயம் சேவரகளை உருவாக்கியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி அவர்கள்...

★ இந்து முன்னணி இயக்கத்தின் உயர் மட்ட குழு உறுப்பினராக இருந்து பணியாற்றியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி அவர்கள்...

★ பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு முக்கிய காரணமாக பணியாற்றியவர் கேப்டன் எஸ் பி குட்டி அவர்கள்...

★ இந்து மதத்தின் ஞானமார்க்கம் மேலோங்கி மக்கள் சரியான அறிவு பெற்றால் மட்டுமே இன்று உள்ள நிலையில் மற்ற மதத்தினரின் மதமாற்ற சூழ்ச்சியில் இருந்து இந்துக்கள் தப்ப முடியும் என்ற உறுதியான கருத்துடன் செயல்பட்டார்.